அடுத்த சில நாட்களில், நாட்டின் தென்பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலை உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.