கடந்த வாரம் இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பலஸ்தீனப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை பலஸ்தீனுடனான ஒத்துழைப்புக்கான இலங்கைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜெனின் அகதிகள் முகாமில் பத்து பலஸ்தீனியர்கள் இறந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்துடன் குழு குறிப்பிடுகிறது.
பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய அரசாங்கத்தின் கீழ் இஸ்ரேலியப்படைகளால் இந்த மாதம் 30 பலஸ்தீனியர்கள் சியோனிச தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து பலஸ்தீனிய மக்களை வெளியேறுமாறு கூறியுள்ளனர்.
சமீபத்திய தாக்குதல்களுக்காக இஸ்ரேலை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப பலஸ்தீனிய தலைமையின் அழைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இது இஸ்ரேலின் புதிய தலைமை பலஸ்தீனியர்கள் மீது அழுத்தத்தை தீவிரப்படுத்தும் என்ற எங்கள் அச்சத்தை மட்டுமே உறுதிப்படுத்துகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இஸ்ரேல் இழைத்த போர்க்குற்றங்களை கண்டித்து பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நிற்குமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்கிறோம்.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் இருந்து இஸ்ரேலியப் படைகளை உடனடியாக நிபந்தனையின்றி திரும்பப் பெறுதல், பலஸ்தீன நிலத்தில் உள்ள சட்டவிரோதக் குடியேற்றங்களை இடிப்பது மற்றும் பலஸ்தீன மக்களை இனச் சுத்திகரிப்பு இலக்காகக் கொண்ட இனப்படுகொலை இஸ்ரேலியப் பிரசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க உலகெங்கிலும் உள்ள அமைதியை விரும்பும் மக்களுடன் நாங்கள் இணைந்து கொள்கிறோம் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.