இஸ்ரேல் மதவழிபாட்டு தலத்தில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் உயிரிழப்பு!

Date:

பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீண்டு வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் இராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது.

ஆனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி ஒழித்துக்கட்ட இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதனால் மேற்கு கரை, காசா முனை பகுதியில் இரு தரப்பும் அடிக்கடி மோதிக் கொள்வதனால் இரு தரப்பிலும் தொடர்ந்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே, ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். மேற்குக் கரையின் போராளிகளின் கோட்டையான ஜெனின் அகதிகள் முகாமில் நேற்று நடத்திய சோதனையின்போது இந்த வன்முறை நிகழ்ந்ததாக கூறினர்.

இந்த மாதத்தில் மோதல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மேற்குகரையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டது. இந்த ஏவுகணைகளை இஸ்ரேலில் உள்ள ஏவுகணை தடுப்பு அமைப்பு நடு வானில் தடுத்து அழித்தது. இதனால், இஸ்ரேல், மேற்குகரை இடையே பதற்றம் அதிரித்தது.

இந்நிலையில், இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. காரில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...