உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு!

Date:

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களை சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் இராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. தொடர்ந்து நீடிக்கும் இந்தப் போரில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையே, ரஷ்யாவின் தாக்குதலை சமாளித்து பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனுக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துள்ளன. உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நவீன ஆயுதங்கள் வழங்கும் மேற்கத்திய நாடுகளின் முடிவானது, அவர்கள் இந்த போரில் நேரடியாக பங்கேற்பதாகவே அர்த்தம் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இந்த நிலையில், நவீன ஆயுதங்கள் அனுப்பப்படும் என அமெரிக்கா மற்றும் ஜெர்மனி அறிவித்த 24 மணி நேரத்துக்குள் உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் 11 பேர் பலியாகினர் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 11 பேர் காயமடைந்தனர். கீவ் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன. தாக்குதலுக்குப் பிறகு சுமார் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறியதாவது:- நீங்கள் அனைவரும் பார்த்தது போல் ரஷ்யா நேற்றிரவு உக்ரைன் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு கண்டனத்தையும் அமெரிக்காவின் சார்பாக காயமடைந்த அனைவருக்கும் அனுதாபத்தையும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...