கடனை திருப்பிச்செலுத்த இலங்கைக்கு கால அவகாசம்!

Date:

200 மில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வங்கி இன்று  வழங்கியுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத, பங்களாதேஷ் மத்திய வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இலங்கை, 2021 மே மாதத்தில் பங்களாதேஷிடம் இருந்து 200 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொண்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், அந்தக்கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டது.

இலங்கை அந்நிய செலாவணி இருப்புக்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில், குறித்தக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தது.

புதிய காலக்கெடுவின்படி, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

Popular

More like this
Related

O/L பரீட்சாத்திகளுக்கென இன்றும் இயங்கும் ஆட்பதிவு திணைக்களம்

17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களில்  இதுவரை...

‘புதிய கல்வி சீர்திருத்தங்கள் தேவையானதே’ என்பதனை அழகிய முறையில் தெளிவுபடுத்திய புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் ஒன்றுகூடல்!

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தேசிய அளவில்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்...

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...