கத்தார் தொண்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட குழுவினரை சந்தித்தார் அலி சப்ரி!

Date:

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கத்தார் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யூசுப் பின் அஹமட் அல்-குவாரி மற்றும் அவர்களுடன் வந்த குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள அமைச்சின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது யூசுப் அல்-குவாரி, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கத்தார் அறக்கட்டளையின் பிரதிநிதிகளை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது, தொண்டு நடவடிக்கைகள் மூலம் ஒத்துழைப்பின் பல்வேறு பகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதேவேளை ‘கட்டார் சரிட்டி’ என்ற பிரபலமான தொண்டு நிறுவனம் கட்டார் அரசின் கீழ் இயங்குகின்ற மிகப்பெரிய தொண்டு நிறுவனமாகும்.

இலங்கையில் அதனுடைய மனிதாபிமான செயற்பாடுகள் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த நிலையில், ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நிறுவனம் அநாவசியமான குற்றச்சாட்டுக்களுக்குட்படுத்தப்பட்டது.

எனினும் இந்த நிறுவனத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.

கட்டார் தொண்டு நிறுவனம் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட ஊழியர்களைக் கொண்ட அலுவலகத்தையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...