பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய துறைத்தலைவராக கடமையாற்றிவரும் ஹெம்மாதகமவை பிறப்பிடமாகக் கொண்ட எம்.இசட்.எம். நஃபீல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஆரம்பக் கல்வியை தனது சொந்த ஊரான ஹெம்மாதகமவிலும் பல்கலைக்கழக பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்திலும் முடித்த இவர் 1999 இல் அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுமாணி கற்கை நெறியையும் பூர்த்தி செய்தார்.
பின்னர் இங்கிலாந்திற்கு புலமைப்பரிசில் பெற்று சென்ற இவர் 2009 இல் லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி (Phd) கற்கை நெறியை பூர்த்தி செய்தார்.
சிறிது காலம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய இவர் இலங்கையின் மூத்த அறிஞர்களான ஏ.எல்.எம். இப்ராஹிம், எம்.ஐ.எம். அமீன் போன்றவர்கள் வகித்த துறைத்தலைவர் பதவியை சுமந்து அறிவு பணியாற்றிவரும் பேராசிரியர் அஷ்ஷேக் எம்.இசட்.எம். நஃபீல் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.