சுகயீன விடுமுறையில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் உள்ள நாடுகளின் முட்டைகள் அரசாங்க அதிகாரிகளுக்கு தேவையற்ற அழுத்தங்களினால் இறக்குமதி செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் டாக்டர் எச்.எச்.எஸ்.பியசிறி தெரிவித்தார்.
மேலும், முட்டைகள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.