கொவிட் கடன் நிவாரணத்தை எதிர்பார்க்க வேண்டாம்! – மத்திய வங்கியின் ஆளுநர்

Date:

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொவிட் தொற்றுநோய் காரணமாக சீர்குலைந்த சுற்றுலா உள்ளிட்ட வணிகத் துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் செலுத்தும் நிவாரணத் திட்டத்தை மேலும் நீட்டிப்பது குறித்து எதிர்பார்க்க வேண்டாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் நிதிநிலையை நிலையானதாக மாற்றுவதில் இப்போதும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவது மிகவும் முக்கியமானது மற்றும் இந்தக் காரணிகளின் அடிப்படையில், நாட்டின் வங்கித் துறை தொடர்ந்து நிதி நிலையானதாக இருக்கும்.

2023ஆம் ஆண்டு பொருளாதாரம் தொடர்பில் இலங்கை வர்த்தக சபையினால் தயாரிக்கப்பட்ட பிரசுரத்தை வெளியிடும் போது ஸ்திரமின்மையை உருவாக்கும் சாத்தியக்கூறுகள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல தொழிலதிபர்களும், வணிகர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மீண்டு வர முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பொருளாதாரத்தில் இப்படி ஒரு விஷயத்தை எதிர்பார்க்க முடியாது. மாறாக, வணிகங்களின் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவது தொடர்பான பிற விருப்பங்களுக்கு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

உதாரணமாக, தற்போது அதிக கடன் சலுகை உள்ள சுற்றுலாத் துறையை கருத்தில் கொள்ளலாம்.

அவர்கள் தங்கள் தொழில்துறையை மீட்டெடுக்கும் வகையில், அவர்கள் நிறைய சுற்றுலா ஊக்குவிப்புகளைச்செய்ய வேண்டும். இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அதுதான் ஒரே வழி.”

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...