சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த வடக்கில் நனோ நீர் திட்டம்!

Date:

வடமாகாண மக்களிடையே சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தலா 23 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட உள்ளன.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம், அந்த அமைச்சின் கீழ் மீள்குடியேற்றப் பிரிவு, சமூக நீர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நாளொன்றுக்கு 2000 லீற்றர் தண்ணீரை முழுவதுமாக சுத்தம் செய்யும் திறனைக் கொண்டுள்ளதாக மீள்குடியேற்றப் பிரிவு தெரிவிக்கிறது.

நனோ தொழில்நுட்பம் மூலம் நீரைச் சுத்திகரிக்கும்போது அதிக உப்பு நீக்கப்படுகிறது.

நனோ சுத்திகரிப்பு மூலம் நச்சுக்கள், பார உலோகங்கள் மற்றும் ஏனைய சேதன இரசாயன உலோகங்கள் அகற்றப்பட்டு நீரின் சுவையும் ,துர்நாற்றமும் நீக்கப்படும்.

2021 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 209 மில்லியன் ரூபாவாகும்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பின் அமைச்சின் கீழ் செயற்படும் மீள்குடியேற்றப் பிரிவின் இந்தத் திட்டத்தின் சுமார் 60 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிலையில். விரைவில் குறித்த திட்டத்தை நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக மீள்குடியேற்றப் பிரிவு தெரிவித்தது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...