இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென் ஜு மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையிலான குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இரு கட்சிகளாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு குறித்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று காலை துணை அமைச்சர் சென் ஜு ஷங்ரிலா ஹோட்டலில் நடத்தியதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.