சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீரை வழங்கக்கூட பணம் இல்லை என சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் தேர்தல் செலவுகளை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சில் தேனீர் வழங்க தேயிலையை கொள்வனவு செய்யவும் எனக்கு வழியில்லை. அமைச்சின் செலவுகளுக்கு பணமில்லை.
இப்படியான நிலைமை நிலவும் நாட்டில் எப்படி 10 மில்லியன் ரூபா செலவில் தேர்தலை நடத்துவது. 10 பில்லியன் ரூபா செலவில் இது முடிந்து விடாது.