ஜனவரியில் 20 கொலை சம்பவங்கள்..!

Date:

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 18 ஆம் திகதி வரையான காலத்தில் தாக்குதல் சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த 20 பேரில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக இந்த கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

அதேவேளை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலத்தில் நாடு முழுவதும் 516 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இவற்றில் 458 சம்பவங்கள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காலப்பகுதியில் நடந்த மோதல் சம்பவங்களில் 731 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவற்றில் 638 சம்பவங்கள் தொடர்பில் தீர்வு காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

மேற்படி சம்பவங்கள் தொடர்பாக சம்பவங்கள் நடந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் சிறப்பு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...