டுபாயில் இலங்கை இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளது!

Date:

டுபாய் சந்தையில் இலங்கையில் உற்பத்தியாகும் இளநீர் தேவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்தார்.

அதிகார சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இளநீர் ஏற்றுமதி தொடர்பான பல பண பரிவர்த்தனைகள் முறையின் ஊடாக மேற்கொள்ளப்பட்டமையால் இந்த நாடு பெருமளவு அந்நியச் செலாவணியை இழந்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

டுபாய் சந்தையில் ஒரு இளநீர் 500 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் இளநீர் ஒன்று அந்நாட்டின் கரையோரப் பகுதியில் 2500 ரூபாவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2022ஆம் ஆண்டு இளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் 06 பில்லியன் ரூபா் எனவும் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு சந்தையில் இளநீருக்கான தேவை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கை சந்தையிலும் இளநீர் விலை அதிகரிக்கலாம் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

O/L பரீட்சாத்திகளுக்கென இன்றும் இயங்கும் ஆட்பதிவு திணைக்களம்

17ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள  மாணவர்களில்  இதுவரை...

‘புதிய கல்வி சீர்திருத்தங்கள் தேவையானதே’ என்பதனை அழகிய முறையில் தெளிவுபடுத்திய புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் ஒன்றுகூடல்!

தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தேசிய அளவில்...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

நாட்டில் இன்று மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும்...

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...