தீ விபத்தில் தாய், மகன், மகள் உயிரிழப்பு!

Date:

மன்கடவல, அலயபத்துவ பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

மஹாமன்கடவல, வெவபாறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (27) காலை ஏற்பட்ட திடீர் தீயினால் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக எலயாபத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த வீட்டின் உரிமையாளரான சமந்தா என்பவர் பலத்த தீக்காயங்களுடன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், இந்த வீட்டுக்கு வேறு வீட்டில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்ததும், அந்த அறையில் பெட்ரோல் போத்தல் ஒன்று இருந்ததும் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தையடுத்து அயலவர்கள் சிறிது நேரத்தில் தீயை அணைத்துள்ளனர்.

இருப்பினும் அறையில் உறங்கிக் கொண்டிருந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...