பட்டதாரி ஆசிரியர்களை இணைக்கும் போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்!

Date:

ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

தற்போது அரச சேவையில் இருக்கும் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பான விண்ணப்பங்களை applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...