பணம் வசூலிக்க நிதியம் அமைக்கத் தீர்மானம்: மைத்திரிபால சிறிசேன!

Date:

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்காததற்காக உச்ச நீதிமன்றம் வழங்கிய 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதற்காக நிதியமொன்றை அமைக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி, நட்டஈட்டை செலுத்தும் திறன் தமக்கு இல்லாததால் மக்களிடம் பணம் வசூலிக்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கையில்,

“10 கோடி கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. 10 கோடி கொடுக்க எனக்கு பண பலம் இல்லை. மக்களிடம் 10 கோடி வசூலிப்பேன் என்று நம்புகிறேன். என்னிடம் மோட்டார் சைக்கிள் கூட இல்லை. எல்லா இடங்களிலும் பணம் வசூலிக்க வேண்டும். நான் பணத்தை கொடுக்கவில்லை என்றால், நான் சிறைக்கு செல்வேன்.

நாங்கள் சகோதரர்களாக இருந்தாலும் டட்லி சிறிசேனவின் தொழிலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் குடும்பத்தில் 11 பேர் உள்ளோம். எனது தந்தைக்கு 05 ஏக்கர் நெற்பயிர்களும் 03 ஏக்கர் காணியும் இருந்தது. அந்த 5 ஏக்கர் காணி எனது சகோதரிகளுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அந்த மூணு ஏக்கர் நிலத்தில் மாம்பழம் பயிரிட்டேன். வேற வருமானம் இல்லை…” என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...