கொழும்பு பல்கலைக்கழக மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைத் தகவல்களை ஏன் பொலிஸார் ஊடகங்களிடம் வழங்கினர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று ஜனவரி 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார,
இந்த உணர்வுபூர்வமான வாக்குமூலம் எவ்வாறு ஊடகங்களுக்கு கசிந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸுக்கு அறிவிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரினார்.
பொலிஸ் மற்றும் நீதித்துறையின் நம்பிக்கையில் சந்தேகநபர் இந்த வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், முக்கியமான பிற தகவல்களை கசியவிடுவதில் காவல்துறை ஈடுபட்டிருக்கலாம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் அண்மையில் கத்தி குத்துக்கு இலக்காகி மரணித்த சம்பவம் தொடர்பான விசாரணைத் தகவல்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டன.