பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

Date:

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளிவாசலில் நேற்று பகல் வழக்கம்போல தொழுகை நடைபெற்ற நிலையில், ஏராளமான மக்கள் கலந்து கொண்ட போது திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இதில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பள்ளிவாசல் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்ததோடு. மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அதேசமயம் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என பொலிஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு பள்ளிவாசலில் இந்த குண்டுவெடிப்பு நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...