அரசாங்கத்தின் புதிய வரி விதிப்புக்கு எதிராக துறைமுக ஊழியர்கள் இன்று துறைமுக பிரதான நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய வரிக் கொள்கையினால் தாம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், வரிகளை நீக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை எதிர்த்தும், நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடி குறித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.