(File Photo)
வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் இருந்து சட்டவிரோதமான முறையில் சிறுநீரகத்தை பெற்று நன்கொடை வழங்கிய வழக்கின் பிரதான சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விடயத்தை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ராஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் இந்த விடயத்தை அறிவித்தனர்.
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள இவர் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விமான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளதாகவும், அதற்கமைய அவரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த சிறுநீரக கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் உட்பட மேலும் 5 சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர் நான்கு சாட்சிகளால் அடையாளம் காணப்பட்ட போதே இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.