புத்தளம் பிரதேச உயர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் புத்தளம் மாவட்ட சர்வமத குழுவிற்கும் இடையிலான உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் 27ம் திகதி மாலை இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை.. செனவிரத்ன, பொலிஸ் அத்தியட்சகர்கள், நிலையங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் நிலைய அதிகாரிகள், போக்குவரத்துப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளும், புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு மதத் தலைவர்களும் மற்றும் பல்லம, கல்பிட்டி, கருவலகஸ்வெவ, புத்தளம், ஆனமடுவ, வனாத்திவில்லு, சாலியவவ, முந்தலம், உடப்பு ஆகிய பிரதேசங்களின் பொலிஸ் அதிகாரிகள் மஹகுபுக்கடவெல, நுரைச்சோலை மற்றும் நவகத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
புத்தளம் மாவட்ட சர்வமதக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி புத்தியகம ரதன தேரர், குருக்கள், அருட் தந்தை ஜெயராஜ் மற்றும் அருட் தந்தை ரத்னமலர், அஷ்.அப்துல் முஜீப், மற்றும் திரு.ருமைஸ் ,அலிசப்ரி, முஸம்மில் ஹாஜியார் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர் களும் கலந்துகொண்டனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இக் கலந்துரையாடலின் பின்னர் போதைப்பொருள் பாவனை, விற்பனையை ஒழிக்கும் வகையில் பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
*கிராமிய பாதுகாப்பு குழுக்களை வலுப்படுத்துதல்
*தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடாத்துதல்
*கள நிலை தொடர்பான தகவல்களை காட்சிப் படுத்தல்
*கிராமப்புற குழுக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே உறவுகளை பலப்படுத்தல்
*மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முன்னேற்ற ஆய்வுக் கூட்டங்களை நடாத்துதல் .