போதைக்கு எதிராக புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணி!

Date:

போதையை ஒழிப்போம், போதையற்ற சமூகத்தை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் புத்தளத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியை புத்தளம் மாவட்டத்தின் சர்வமத அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த பேரணி புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நடை பவனியாக புத்தளம் மர்ஹூம் பிஸ்ருல் ஹாபி நகர மண்டபத்தைச் சென்றடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் சர்வமத தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டனர்.

போதைக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு குறித்த விழிப்புணர்வு பேரணியில் இவர்கள் கலந்து கொண்டனர்.

நகர மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பான விஷேட கூட்டத்தில் புத்தளம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரவீந்திர விக்ரமசிங்க

புத்தளம் மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.வை செனவிரத்ன ஆகியோரிடம் புத்தளம் மாவட்ட சர்வ மதத்தலைவர்கள் போதை ஒழிப்பு தொடர்பான மகஜரையும் கையளித்தனர்.

(தகவல்: எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...