மதத்தின் பெயரால் வெறுப்புணர்வைக் காட்டுபவர்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது?

Date:

இன்று ஐரோப்பா முழுவதும் ‘இஸ்லாமிய வெறுப்பு’ என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கம் இருப்பதாகக் கூறும் பல ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் கூட, திருக் குர்ஆன் பிரதிகளை எரிப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்கள் நடைபெறும் போது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இது அந்த நாடுகளின் பிரஜைகளாக வாழும் சிறுபான்மை முஸ்லிம்களை கவலை கொள்ள செய்வதையும் அரசுகள் சற்றும் பொருட்படுத்துவதில்லை.

இவ்வாறான நிலையில், வெறுப்புணர்வைக் காட்டுபவர்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்த இஸ்லாமிய வழிகாட்டல்களை சற்று நோக்குவது பொருத்தமானது என நினைக்கிறோம். திருக்குர்ஆனில் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் 134வது வசனம் இவ்வாறு கூறுகின்றது:

அவர்கள் ஏழ்மையிலும், செல்வ நிலைமையிலும் (நல்ல விடயங்களுக்காக) செலவு செய்கிறார்கள். (மேலும் அவர்கள்) கோபத்தை விழுங்குபவர்கள், மக்களை மன்னிப்பவர்கள். (அத்தகைய) நல்ல செயல்களைச் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்

அனுஷ்டான முஸ்லிம்கள் போன்றே பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்களும் ஒரே விதமாக திருக்குர்ஆனுக்கு மிகுந்த மரியாதை காட்டுவார்கள்.

உலகில் உள்ள ஒவ்வொரு முஸ்லீம் வீடுகளிலும் திருகுர்ஆன் அவ்வீட்டில் இருக்கும் மிக உயரமான இடத்திலேயே வைக்கப்படும். அது மட்டுமின்றி, மிக உயர்ந்த பட்டுத்துணியால் தைத்த உறையில் திருக்குர்ஆனை வைத்து வாசனைத் திரவியங்களையும் தடவி மிக அன்புடன் அதைப் பேணி பாதுகாத்து வருவார்கள்.

மேலும் குர்ஆனின் ஒரு சில சிறிய அத்தியாயங்கள் மனனமாக ஒரே ஒரு முஸ்லிமை உலகில் தேடுவது சிரமம்.

குளித்த சுத்தமாக இருக்கும் நிலையிலும், கை கால் முகம் கழுவிய பின்பே முஸ்லிம்கள் திருக்குர்ஆனை தொடுவார்கள்.

ஒருவர் திருக்குர்ஆனை ஓதுவதை கண்டால் தமது பேச்சுக்களை நிறுத்தி விட்டு அதற்கு மரியாதையுடன் செவி சாய்ப்பார்கள். குர்ஆனை ஓதும் ஒருவர் ஓதி முடித்ததும் அதை முத்தமிட்டு, தலை மேல் சற்று வைத்திருந்து அதன் பின்பு உயரமான இடத்தில் அதை வைப்பார்.

இந்தளவு திகுர்ஆனை நேசிக்கும் முஸ்லிம்கள் முன்னிலையில் அதை அவமதித்தால், அதை தீக்கிரையாக்கினால் அவர்கள் மனநிலை என்னவாகும்?

உலகிற்கே ஜனநாயகத்தையும் மத ஒற்றுமையையும் போதிக்கும் ஸ்வீடனில் கடந்த ஜனவரி 21 ஆம் திகதி ரஸ்மஸ் பலுடான என்பவன் ஒரு திருக்குர்ஆன் பிரதியை பொது இடத்தில் தீயிட்டு எரித்தபோது, சுற்றியிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவனை தடுத்து கைது செய்யாதது மட்டுமின்றி  அவனுக்கு அந்த இழிவான செயலை செய்வதற்குத் தேவையான பாதுகாப்பையும் அளித்துள்ளனர்.

இது போன்ற சமயங்களில் முஸ்லிம்களுக்கு அடக்க முடியாத கோபம் வருவது இயல்பே. குறிப்பாக இவ்வாறான கேவலமான செயல்களை அரசும் அதிகாரிகளும் ஆதரிக்கும் போது ஆதரவற்றவர்களின் கோபம் எல்லை  சகஜமே.

ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பொறுமையை கையாள்வதே மிகச்சிறந்த பதில் என்று இஸ்லாம் கூறுகிறது.

திருக்குர்ஆனின் ஒரு வசனத்தில், இணை வைப்பவர்கள் தெய்வங்களாக நம்பி அழைக்கும் சிலைகளை இழிவுபடுத்த வேண்டாம் என்றும், அவ்வாறு செய்தால் அவர்கள் அறியாமை காரணமாக அல்லாஹ்வை ஏசுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுளது.

உலகில் வாழும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மதமும் மதச்சடங்குகளும் மேலானவையாகவே இருக்கும் இது இயல்பே.

ஆனால் இறுதித் தீர்ப்பு நாளில் அவர்கள் செய்து கொண்டிருந்தன் உண்மை நிலையை அல்லாஹ் அவர்களுக்கு தெளிவு படுத்துவான் என் திருக்குருஅன் கூறுகின்றது.

சுருக்கமாகச் சொன்னால், மதத்தின் பெயரால் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ள வேண்டாம் என்பதே இஸ்லாமிய வழிகாட்டலாகும்.

முரண்பட்ட வாதங்கள் தோன்றும்போது விசுவாசிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் அழகாக விவரிக்கிறது:

ரஹ்மானின் (அதாவது அல்லாஹ்வின்) அடியார்கள் பூமியில் பணிவுடன் நடப்பார்கள். மூடர்கள் தர்கிக்க வரும் போது ‘(உங்களுக்கு) சாந்தி (உண்டாகட்டும்)’ என்று கூறி ஒதுங்கிச் செல்வார்கள் – 25:63

நல்லதும் தீயதும் சமமாக மாட்டாது என்றும், தீமைக்கு நன்மை மூலமே பதில் அளிக்கும் படியுமே இஸ்லாம் கூறுகின்றது. அவ்வாறு செய்தால் ‘உங்கள் மோசமான எதிரியும் உங்கள் உற்ற நண்பனாக மாறி விடுவான்’ என்பதே திருக்குர்ஆனின் உத்தரவாதமாகும். இதைச் செய்வது எளிதல்ல என்ற போதிலும் அவ்வாறு செய்வதன் இறுதிப்பலன் மகத்தான வெற்றியே.

பிறரின் சமய நம்பிக்கையை ஒருவர் ஏற்காவிட்டாலும் அவ்விடயத்தில். பண்பாக நடப்பதும் அதை அவமதிக்காமல் இருப்பது சகவாழ்வுக்கு மிகவும் அவசியமானதாகும்.

மத நம்பிக்கையை ஏற்காமல் இருப்பதற்கும் அதை அவமதிப்பதற்கும் உள்ள வித்தியாசம் மிகப்பெரியது. மதம் என்பது மனிதர்ளுக்கு மிகவும் முக்கியமான விடயமாகும் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.

இதனால்தான் அரசியல்வாதிகள் அன்றும் இன்றும் மக்களைப் பிரிப்பதற்கு மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றார்கள்.

வெறுப்பை வெறுப்பால் தணிக்க முடியாது என்பதை பொதுவாக எல்லா மதங்களும் பேதிக்கின்றன. கருனை நபி முஹம்மத் (ஸல்) அன்னவர்களின் வாழ்க்கை இதற்கான நடைமுறை உதாரணமாகவே இருந்தது.

நபியவர்கள் ஒரு வீட்டைக் கடந்து செல்லும் போது அவர் மீது மாடியில் இருந்து ஒரு வயதான மாது குப்பையை கொட்டி வந்த சம்பவம் பற்றி அறியாதோர் இருக்க முடியாது. ஒரு நாள் அந்த வீட்டை கடக்கும் போது தன் மீது குப்பை வந்து விழாததை பார்த்த நபியவர்கள் என்ன செய்தார்கள்? உடனே மேல் மாடிக்குச் சென்று பார்த்தார்கள்.

அப்போது அந்த மூதாட்டி சுகயீனமுற்று எவருடைய துணையும் இன்றி இருப்பதை கண்டார்கள். இந்த மனிதருக்கு தான் கொடுத்த தொல்லைக்காக அவர் தனக்கு ஏசுவார் அல்லது அடிப்பார் என என் மூதாட்டி பயந்தாள்.

ஆனால் நடந்தது என்ன? நபியவர்கள் அம்மூதாட்டியிடம் அன்பாக பேசி சுகம் விசாரித்தார்கள்.

கனிவான முகத்துடன் அவளுக்கு ஆறுதல் கூறினார்கள் அந்த மூதாட்டி ஆச்சரியப்பட்டாள்.

முஹம்மது ஒரு தீய மனிதர் என்று தான் கேள்விப்பட்டதெல்லாம் பொய்யென்றும், அவர் மிகவும் கருனைமிக்க நல்ல மனிதர் என்றும் அவள் உணர்ந்து மனம் வருந்தினாள்.

அந்த புரிதலுக்கான காரணம் நபியவர்கள் வெறுப்புக்கு வெறுப்பால் பதில் தராமையே ஆகும். அதாவது ஒருவர் குறோதத்தை காட்டும் போது உண்மை விசுவசி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றிய குர்ஆனின் வழிகாட்டலை நபியவர்கள் அவ்வாறே கடைபிடித்தமையே ஆகும்.

வெறும் குப்பையை கொட்டிய ஒரு பெண் மீது மட்டுமல்ல தனக்கும் தன்னுடைய சகாக்களுக்கும் சொல்லொனாத் துன்பங்களை கொடுத்து வந்த ஒரு சமூகத்தின் மீதும் நபியவர்கள் வெற்றிகரமாக பிரயோகித்த ஆயுதம் கருணையே. இறுதியில் அது கூரிய வாளினால் பெற முடியாத வெற்றியை பெற்றுத் தந்ததற்கு வரலாறு சான்று பகர்கின்றது.

நபியவர்களை அன்னாருடைய சொந்த ஊரான மக்காவிலிருந்து இஸ்லாத்தின் எதிரிகள் விரட்டியடித்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்லாம் பலரால் ஏற்கப்பட்டு மகத்தான வெற்றி கண்டு மிகப்பெரிய படையுடன் வந்து மக்காவை கைப்பற்றிய போது அங்கு எதிரிகள் மிகவும் பலவீனமடைந்து எண்ணிக்கையிலும் குறைவாகவும் இருந்தனர்.

இஸ்லாம் பலவீனமாக இருந்த அதன் ஆரம்ப காலத்தில் நபியவர்களும் விசுவாசிகளுக்கும் செய்த கொடுமைகளுக்கு தாம் பழி வாங்கப்படுவோம் என அவ்வெதிரிகள் அஞ்சிக்கொண்டிருந்தனர்.

அப்போது நபியவர்கள் தம்முடைய மிகவும் பலமான ஆயுதமாகிய கருணையை பயன் படுத்தினார்கள். ‘மார்க்கத்தில வற்புறுத்தல் இல்லை’ (2:256) என்ற திருக்குர்ஆன் வசனதிற்கு ஏற்ப, நபியவர்களும் தம்முடைய பொது மன்னிப்பிற்காக இஸ்லாத்தை ஏற்பதை ஒரு நிபந்தனையாக முன்வைக்கவுமில்லை.

எதிரிகள் அதைக் கண்டு வியந்தது மட்டுமின்றி ஏரானமானோர் இஸ்லாத்தையும் ஏற்றனர். வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது என்பதற்கு இஸ்லாமிய வரலாற்றில் இது மற்றொரு ஒப்பற்ற எடுத்துக்காட்டாகும்.

உண்மையில் மக்கா வெற்றிக்கான காரணம் ஆயுதமல்ல அன்பே என்ற படியால்தான் அந்த மகத்தான சம்பவம் இஸ்லாமிய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது என்றால் அது மிகையல்ல.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...