நாமல் ராஜபக்சவின் முகப்புத்தக நேரலையை பார்வையிட்ட இணையவாசிகள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் முகமாக நாமல் ராஜபக்சவை திட்டி ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீண்ட நாட்களின் பின் தன்னுடைய முகப்புத்தகத்தின் ஊடாக நேரலையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கியிருந்தார்.
குறித்த கருத்துக்களை பார்வையிட்டவாறு பேசிய நாமல் ராஜபக்ச அதில் ஒரு சிலரின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இந்தநிலையில், நாமல் ராஜபக்சவின் சகோதரரான ரோகித ராஜபக்ச அனுப்பிய ராக்கெட்டிற்கு என்ன ஆனது என ஒரு கேள்வி நேரலையில் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நாமல் அந்த ரொக்கெட் தொடர்பாக கண்டி மாவட்டத்தில் உள்ள அது தொடர்பான நிறுவனத்திற்கு சென்றால் முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும் எனவும், ரொக்கெட்டை மட்டும் தேடாமல் அந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புக்களையும் தேடி பயன்பெறுமாறும் தெரிவித்துள்ளார்.