மறைந்த முன்னாள் சபாநாயகர் எம்.எச். முஹம்மது அவர்களின் சகோதரி திருமதி மாரியத்துல் கிப்தியா அவர்கள் இன்று காலை காலமானார்.
திருமதி கிப்தியா அவர்கள் மறைந்த மூத்த சமூக சேவையாளரும் இஸ்லாமிய மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவனத்தின் தலைவரும் மாளிகாவத்தை இஸ்லாமிய நிறுவனத்தின் பணிப்பாளர் உறுப்பினருமான அல்ஹாஜ் அஷ்ரப் ஹுசைனின் மனைவியும் ஆவார்.
மேலும், பஹன மீடியா பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் அல்ஹாஜ் சையத் சலீம் மௌலானா அவர்களின் மாமியும் ஆவார்.
அவரது ஜனாசா நல்லடக்கம் இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு குப்பியவத்தை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும்.
இவரது மறைவையொட்டி பஹன மீடியா முகாமைத்துவமும் ‘நியூஸ் நவ்’ஊடக நிறுவனமும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது.
அன்னாரை எல்லாம் வல்ல அல்லாஹ் உயர்ந்த சுவனபதியில் நுழைவிப்பானாக….!