முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு ஆஜராகியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக தந்தை சிறில் காமினி மற்றும் இருவரால் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.