தொழில் நிமித்தம் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் திறமைமிக்க மற்றும் திறமையற்ற இலங்கைத் தொழிலாளர்களுக்கு அரபு கலாச்சாரம் மற்றும் மொழி குறித்த போதிய பூர்வாங்க பயிற்சிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நடைபெற்றது.
அரபு லீக்கில் உள்ள ஒன்பது நாடுகளை உள்ளடக்கிய அரபு கவுன்சில் உறுப்பினர்களுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் இன்று காலை கல்வி அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான அரபு கவுன்சிலின் தலைவர், பாலஸ்தீன தூதுவர் டாக்டர் சுஹைர் எம்.எச்.தார் செயிட், சவூதி அரேபியா, ஈராக் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மூன்று உயர்மட்ட இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.
ஒரு கலந்துரையாடலில் உயர் கல்வி உதவித்தொகை மற்றும் மாணவர் பரிமாற்ற திட்டங்கள் ஆகியவை அடங்கும் என்று அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.