உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்காக சுமார் 200 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக அரச அச்சக அதிகாரி கங்கனி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.
அச்சு வேலைகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் வாக்குச் சீட்டுகளின் முதற்கட்ட அச்சிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.