வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து திறைசேரிக்கு 3 பில்லியன்

Date:

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து பொது திறைசேரிக்கான மூன்று பில்லியன் ரூபாய் காசோலையை அமைச்சர் மனுஷ நாணயக்கார, உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த காசோலையை வழங்கியுள்ளது.

குறிப்பாக அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்தல், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், நெல் கொள்வனவு போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக கடந்த வருடம் பெற்ற பணத்தில் இருந்து இந்தத் தொகையை வழங்கியுள்ளது.

இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திறைசேரிக்கு அவ்வப்போது வழங்கிய மொத்தத் தொகை 3,382 மில்லியன் ரூபாய் என்பதோடு மூன்று பில்லியன் ரூபாய் தொகையை ஒரே நேரத்தில் வழங்குவது இதுவே முதல் தடவையாகும்.

புற்றுநோய் வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் ரூபாயை மானியமாக வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 100 மில்லியன் ரூபாய் காசோலையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...