இன்று (ஜன. 2) காலை திட்டமிடப்பட்ட 11 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இலங்கை புகையிரத சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான பிரச்சினைக்கு இன்று தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
புகையிரத திணைக்களத்தின் சுமார் 500 ஊழியர்கள் கடந்த வருடம் ஓய்வு பெற்றதன் காரணமாக பல புகையிரத நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ரயில்வே பொது முகாமையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதால் பயணிகள் எந்தவிதமான செல்வாக்கு அல்லது மோதல் சூழ்நிலையை எதிர்கொண்டால், நிலைய அதிபர்கள் சேவையில் இருந்து விலகி தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.