(file photo)
கதிர்காமத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று இன்று (01) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 88வது கிலோமீற்றருக்கு அருகில் வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது.
பேருந்தில் பயணித்த 15 பேர் விபத்துக்குள்ளானதில் காயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 4 பெண்களும் மூன்று குழந்தைகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன் ஏனையோர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.