2 ஆண்டுகளுக்கு பிறகு ட்ரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடை நீக்கம்!

Date:

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

ட்ரம்ப் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தோல்வியை ஏற்க மறுத்தார். இதனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி டிரம்பின் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு டிரம்ப் டுவிட்டர் கணக்கு மீதான தடையை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இந்த நிலையில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் நிக் திளெக் கூறும் போது, வரும் வாரங்களில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் மீட்டெடுப்போம்.

குற்றங்களை தடுக்க புதிய பாதுகாப்பு தடுப்புகளுடன் மீண்டும் நிலை நிறுத்தப்படும்.

நிறுவனத்தின் கொள்கைகளின் ஒவ்வொரு மீறலுக்கும் 2 ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம் என்றார். 2 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி,...

இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் 738 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில்,...

கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்...