22,000 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு: கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இந்த மாத இறுதியில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.

தற்போது பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

12,000 ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி ஓய்வு பெற்றமையை அடுத்து, தற்போது 22,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...