A/L பரீட்டை நடைபெறும் காலத்தில் மின் தடையை நிறுத்த முடியாது: மின்சார சபை திட்டவட்டம்!

Date:

க.பொ.த உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நிறுத்த முடியாது என்று இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது.

அவ்வாறு மின்வெட்டினை நிறுத்த வேண்டுமாக இருந்தால், அதற்கான செலவை சமாளிப்பதற்கான நிதி வழங்கப்பட வேண்டும் என்றும், இலங்கை மின்சார சபையின் தலைவர் நலிந்த இளங்ககோன் கூறியுள்ளார்.

இந்த நிதி வழங்கப்படாமல், மின்சார தடையை இடைநிறுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை நிறுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டது.

ஆனால் நேற்றும் நாட்டில் பரவலாக மின்தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சட்டக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, உறுதிபாட்டை மீறி மின்தடை அமுலாக்கப்படுமாக இருந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சார சபையை எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபையின் தலைவர், இந்த காலப்பகுதியில் மின்தடையை நிறுத்துவதாக இருந்தால், அதற்கு 4.1 பில்லியன் ரூபா மேலதிக தேவையாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...