Pahana Academy மற்றும் ‘NewsNow’ இணைந்து நடத்திய MoJo Mobile Journalism பயிற்சி நெறி!

Date:

பஹன மீடியா பிரைவெட் லிமிடெட் கீழ் இயங்கும் பஹன அகடமி மற்றும் ‘நியூஸ் நவ்”  ஏற்பாடு செய்த கையடக்கத் தொலைபேசி மூலமான ஊடகவியல் தொடர்பான (MOJO) 3 நாள் பயிற்சி நெறியின் இறுதி நாளன்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புத்தளம் மாவட்டத்திலுள்ள i-Soft City கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளில் ஒருவராக கலந்துகொண்ட புத்தளத்தின் பிரபல கலைஞரும் ஊடகவியலாளருமான ஹிஸாம் ஹுஸைன் அவர்கள் மேற்படி ஊடகவியல் பயிற்சி நெறி தொடர்பாக வெளியிட்டுள்ள குறிப்பை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

Pahana Academy மற்றும் NewsNow வெப் ஊடக நிறுவனம் இணைந்து நடத்திய MoJo (Mobile Journalism) கையடக்க தொலைபேசி மூலம் ஊடகயியல் தொடர்பான மூன்று நாள் பயிற்சியை நிறைவுசெய்த பயிலுனர்களுக்கு சான்றிதழும் ஊடகவியலாளர் அடையாள அட்டையும் வழங்கும் நிகழ்வு (21) புத்தளம் i-Soft City Campus கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

பயில்நெறியின் ஒப்படையாக (Assignment) பயிலுனர்களினால் தொகுக்கப்பட்ட மூன்று நிமிடங்களைக்கொண்ட ஆவணக்காணொளிப் படங்கள் காண்பிக்கப்பட்டன. மூன்று நாள் பயிற்சியின் நிறைவில் பயிலுனர்களின் ஆவணத் திறன் எதிர்காலத்தில் சிறப்பான ஊடகவியலாளர்களாகுவர் என்பதற்கான சமிக்ஞைகளாயின.

‘குரல் அற்ற மக்களுக்கு குரலாகுங்கள்’ என்ற தொனிப்பொருளின் கீழ் Pahana Academy மற்றும் NewsNow இணைந்து நாடு தழுவிய ரீதியாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள மேற்படி ஊடகயியல் பயிற்சியின் முதலாவது பயிற்சி புத்தளத்தில் நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மக்களுக்கு சரியான திசையைக் காட்டும் திசைகாட்டியாக வேண்டிய ஊடகயியலை பாதகயியலாக்கி தவறாக வழிகாட்டும் இன்றைய காலகட்டத்தில் Pahana Academy மற்றும் NewsNow மேற்கொள்ளும் இந்நற்பணியில் விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு ஊடகவியல் தொடர்பான உரையொன்றை நிகழ்த்தியதோடு சான்றிதழும் வழங்கிவைக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகின்றேன்.

Popular

More like this
Related

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...