இன நல்லிணக்கத்துக்கு அடையாளமாக திகழும் சிங்கப்பூர் ‘சூலியா’ பள்ளிவாசல்

Date:

கிழக்காசிய நாடுகளுள் முக்கியமான ஒரு நாடு சிங்கப்பூர். இங்கு வாழும் தென்னிந்திய சமூகத்தில் தமிழர்கள் மிகப் பெரிய பிரிவினர்.

தென்னிந்தியா, வட இலங்கை மற்றும் இன்றைய இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்திலிருந்து தோன்றிய இவ்வினத்தவர் இன்று சிங்கப்பூர் நாடெங்கும் பரந்து விரிந்துள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூருக்கு வந்த தமிழர்கள், இன்று சிங்கப்பூர் மக்கள்தொகையில் ஐந்து சதவிகிதம் உள்ளனர்.

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள், இருப்பினும் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தமிழர்களும் இருக்கின்றனர்.

சமீபத்தில் இந்தியா தமிழ்நாட்டின் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சிங்கப்பூர் சென்றிருந்தப் போது, புகழ்பெற்ற இந்திய பள்ளிவாசலான ஜாமியா சூலியாவுக்கு அவர்  பள்ளிவாசல் பயணம் தொடர்பான அனுபவத்தினை பகிர்ந்துகொண்டார்.

சில தமிழர்கள் “சூலியா”ஸ் என்றும் அழைக்கப்பட்டனர். சூலியா என்பது தென்னிந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்களை குறிக்க பயன்படுத்தும் ஒரு சொல்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களால் 1827 ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி,1835 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

சோழர் ஆட்சி செய்த நாகப்பட்டினம் துறைமுகம் வழியாக வந்த முஸ்லிம்களை சூலியாக்கள் என பர்மா, சிங்கப்பூர் மற்றும் மலேஷிய நாடுகளில் குறிப்பிடுகிறார்கள். சோழர் என்ற சொல், சூலியா என இங்கு அறியப்படுகிறது.

சோழ சாம்ராஜ்யம் கலிங்கப் பகுதி (ஒரிஸா) வரை கடற்படை தளம் வைத்திருந்ததால், கலிங்கப் பகுதியை குறிக்கும் வகையில் இவர்களை ‘கிளிங்’ எனவும் குறிப்பிடுவதுண்டு.

மலேஷியாவின் பினாங்கு தீவில் சூலியா தெரு என வீதியே உள்ளது.

தாய்லாந்து, வியட்நாம்,புருணே, இந்தோனேஷியாவிலும் இத்தகைய வரலாற்று தடங்களும், புரிதல்களும் இருக்கிறது. இப்போது மீண்டும் சிங்கப்பூரை நோக்குவோம்.

சிங்கையில் உள்ள சூலியா பள்ளியை கட்டியவர் பிரபல பொறியாளர் திரு. ஜார்ஜ் டிரம்கூல் கோல்மன் ஆவார்.

இவர்தான் சிங்கையில் புகழ் பெற்ற ஆர்மீனியன் தேவாலயத்தையும், பழைய பாராளுமன்றத்தையும் கட்டியவர். இதன் கட்டட அமைப்பு தென்னிந்திய பாணியில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது 200 ஆம் ஆண்டை நெருங்கி வரும் நிலையில், இதனை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.பெரிய வளாகத்துடன் இருக்கும் இப்பள்ளி தான், இந்தியர்களால் கட்டப்பட்ட 6 பள்ளிகளில் பெரியதாகும்.

ரமலான் மாதத்தில் தமிழ் பேசும் மக்கள் இங்கு மிகுதியாக கூடுவதை பார்க்க முடியும்.கடந்த ஜனவரி 2 அன்று நான் அங்கு சென்றபோது, இமாம் ஷேக் முகம்மது காஸி ஃபி அவர்களும்,துணை இமாம் முகைதீன் அப்துல் காதர் ஃபாஜி அவர்களும் வரவேற்று அங்குள்ள நூலகத்திற்கு அழைத்து சென்றனர்.

ஆங்கிலம், தமிழ், அரபி, மலாய் மொழி நூல்கள் நிறைந்திருந்தது.தமிழகத்தில் உள்ள எல்லா இறையில்லங்களிலும் இப்படிப்பட்ட நூலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

இந்த பள்ளிக்கு அடுத்து சுமார் 50 அடி தூரத்தில் தமிழக மக்களால் கட்டப்பட்ட மாரியம்மன் கோயில் உள்ளது. அதுவும் புனரமைக்கப்படுவதை பார்க்க முடிந்தது.

இதில் உள்ள ஒற்றுமையை நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது. அன்றைய சிங்கப்பூருக்கு தமிழகத்திலிருந்து வருகை தந்த இந்துக்களும், முஸ்லிம்களும் தமிழர்களாக இணைந்து ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர்.

தொழில் மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு அருகில், அடுத்தடுத்து இடம் வாங்கி, தங்களுக்கான வழிபாட்டுத் தலங்களை கட்டியுள்ளனர் என்பது தெரிய வருகிறது. இதை அங்குள்ளவர்கள் பெருமிதத்துடன் சுட்டுகிறார்கள்.

நல்லிணக்கம் ஓங்கியிருக்கும் சிங்கையில், புனரமைக்கப்படும் சூலியா பள்ளி பெருமை மிகு வரலாற்றுடன் காட்சியளிக்கிறது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...