இன்று முதல் 20 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது!

Date:

பாராளுமன்றத்தை இன்று முதல் 20 ஆம் திகதி வரை கூடவுள்ளது.

இன்று மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2307/12 மற்றும் 2308/26 ஆம் இலக்க அதிவிசேட
வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணி சட்டத்தின் கீழ் 2308/51 ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்தார்.

அதனையடுத்து, தனியார் உறுப்பினர் சட்டமூலமாக, பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் முன்வைத்த உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இல. 126) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிரேம்நாத் சி.தொலவத்த முன்வைத்த உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் (இல. 160) ஆகியவை இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டு சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு முன்வைக்கப்படவுள்ளது.

Popular

More like this
Related

அல்-கஸ்ஸாம் படைப் பிரிவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அபு உபைதா கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஹமாஸ்.

காசாவை மையமாகக் கொண்டு இஸ்ரேல் மேற்கொண்ட கடந்த இரண்டு ஆண்டுகாலப் போரின்...

லாகூர், ஐட்சன் கல்லூரி மாணவர்கள் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வருகை

பாகிஸ்தான், லாகூரில் உள்ள ஐட்சன் கல்லூரியைச் சேர்ந்த 41 மேல்நிலைப் பள்ளி...

கொழும்பு மற்றும் காலி முகத்திடல் பகுதியில் சிறப்பு போக்குவரத்துத் திட்டம்

2026 புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக கொழும்பு நகரம் மற்றும் காலி முகத்திடல் பகுதியில்...

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார்!

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயர்பெற்ற முன்னாள் பிரதமர் பேகம்...