‘இலங்கையின் இயற்கை வளத்துறைகளில் சவூதி அரேபியா முதலிட வேண்டும்’

Date:

கனிய வளத்துறையில் சவூதி அரேபியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய தலைநகர் ரியாதில் அண்மையில் நடைபெற்ற “எதிர்கால கனிய வள அமைப்பு” கூட்டத்தின் முடிவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடன்பொறி, வெளிநாட்டு நாணயங்களின் தட்டுப்பாடுகளால்தான், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

நேச நாடுகளின் ஒத்துழைப்புடன் நெருக்கடியிலிருந்து மீள்வதுதான் இலங்கையின் பிரதான இலக்கு. இதற்காக சவூதி அரேபியாவின் ஒத்துழைப்பும் இலங்கைக்கு அவசியப்படுகிறது.

கனிய வளத்துறையில் முன்னேறுவதற்கு இலங்கையின் இயற்கை வளத்துறைகளில் சவூதி அரேபியா முதலிட வேண்டும். கனிய வளத்துறையிலான முதலீடுகள், கூட்டு ஒப்பந்தங்கள் என்பனவே எமது நாட்டுக்கு அவசியம்.

இவ்வாறான ஒத்துழைப்புக்களை எதிர்கால கனிய வள அமைப்பு  வழங்க முடியும். இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்தும் இலங்கை இதையே எதிர்பார்க்கிறது.

எதிர்கால கனிய வள அமைப்பு சவூதியின் கைத்தொழில் துறைக்கு மிகச்சிறந்த தொழிலாளர்களைப் பெற்றுத் தருகிறது. இலங்கையின் இயற்கை வளங்கள் மற்றும் கனிய வளத்துறைகளில், வௌிநாட்டு முதலீடுகளைச் சாத்தியப்படுத்துவதனூடாகவே, நாட்டின் பொருளாதார நெருக்கடியைப் போக்க முடியும் என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...