இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கான ஆதரவை இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்தது!

Date:

இலங்கையின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது என்று ஆதாரங்களை மேற்கோள்காட்டி ‘Bloomberg’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கூற்றுப்படி, சீனா மற்றும் இந்தியாவுடனான இலங்கையின் கடன் பேச்சுவார்த்தை “வெற்றிகரமானது” என்றும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்ட 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியைப் பெறுவதற்கான முக்கியத் தடையை நீக்க உதவும் என்று ‘Bloomberg’ இணையதளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் பேசுகையில், இனி எமக்கு எஞ்சியிருப்பது இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் உடன்படிக்கையைப் பெறுவதுதான். தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது என்பதை என்னால் இந்த சபையில் கூற முடியும். விரைவில் அதற்கான பதில் கிடைக்கும்,” என்றார்.

கடன் வசதியைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெறுவதற்கு முன்னர், சீனா, ஜப்பான் மற்றும் பாரிஸ் கிளப் உறுப்பினர்களிடமிருந்து கடன் மறுசீரமைப்பு தொடர்பான நிதி உத்தரவாதங்களை இலங்கை பெற வேண்டும்.

இதேவேளை, இன்று (17) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மான செய்தியாளர் மாநாட்டில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறப்பட வேண்டிய கடன் தொகை இதுவரை வெற்றிகரமாக எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

“வெற்றிகரமான முடிவுகள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அமைச்சரவைக்கு தெரிவித்தார்.

மிகவும் நம்பிக்கையான பதில்கள் கிடைத்து வருகின்றன. இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் எட்டப்பட்டு வருவதாகவும், அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில், முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...