ஒருமித்த கருத்துக்கு வருமாறு தேர்தல் ஆணையத்திற்கு ஜனாதிபதி அறிவிப்பு!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சட்டமா அதிபரும் பிரசன்னமாகியிருந்ததுடன், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்களிப்பு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் 04 கருத்துக்களை முன்வைத்துள்ளமையினால் அவர்கள் முதலில் ஒரு கருத்துக்கு வருமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மையினரின் ஏகோபித்த விருப்பத்துடன் செயற்படுவதாக அறிவித்துள்ள ஜனாதிபதி, ஆணைக்குழுவின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என வலியுறுத்தியுள்ளார்.

தேவைப்பட்டால் சட்டமா அதிபரிடம் எழுத்து மூல விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

சுதந்திரமான மற்றும் அமைதியான தேர்தலுக்கான பின்னணி மற்றும் நிபந்தனைகள் குறித்து சட்டமா அதிபர் அவர்களுக்கு அறிவித்துள்ளார்.

சட்டச்சிக்கல் இருப்பின் நேரடியாக தன்னிடம் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் 04 கருத்துக்களை முன்வைத்ததன் காரணமாக நேற்றைய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...