களுத்துறை போதனா வைத்தியசாலையில் உதவி சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
எல்.சி.ஜெயசிங்க என்ற வைத்தியரே காணாமல் போயுள்ளார். சட்ட வைத்திய அதிகாரியின் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியர் வந்ததாக கூறப்படும் கார் களுத்துறை பாலத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மருத்துவர் ஆற்றில் விழுந்தாரா என்பதை அறிய களுகங்கையில் தற்போது இரண்டு படகுகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.