‘சாரதிகள் வாகனம் ஓட்டும் போது மது, போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்’

Date:

வாகன சாரதிகளில் சுமார் 10 சதவீதமானோர் போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் சிலர் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் (NTMI) தலைவர் சவேந்திர கமகே தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலோர் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் மிதமான வருமானம் ஈட்டுபவர்கள் கனரக வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பேருந்து ஓட்டுனர்களும் மது, போதைக்கு அடிமையானவர்களா என்பதை கண்டறிய சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கனரக வாகன ஓட்டிகளை பரிசோதிக்கும் முன்னோடித் திட்டம் கடந்த ஆண்டில் நடத்தப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளதுடன்  திட்டத்தைத் தொடர்வதாக இருந்த போதிலும், இந்த நோக்கத்திற்காக தேவைப்படும் நிதி போதுமானதாக இல்லை என்று சவேந்திர கமகே கூறினார்.

மேலும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (2021) பதவி வகித்த காலத்தில், புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருந்த சாரதிகளுக்கும், உரிமம் புதுப்பித்தலின் போதும் மருத்துவப் பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...