சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டார்!

Date:

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து நாட்டில் காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. அதை கட்ட தவறியவர்கள் நீதிமன்றம் மூலம் அதிக அபராதம் செலுத்த நேரிடும்.

நாடு முழுவதும் 100க்கு மேற்பட்ட புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரபடுத்துவதற்காக வடமேற்கு இங்கிலாந்தில் வீடியோ எடுக்கப்பட்டது.

அந்த வீடியோவில் ரிஷி சுனக் காரில் பயணித்தப் படி கேமராவை பார்த்து பேசுவது போன்று இருந்தது. அவரது காரின் முன்னும் பின்னும் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பாதுகாப்புக்காக சென்றனர்.

இதில் பிரதமர் ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த செயலுக்கு ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டு உள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு சிறிய கிளிப்பை படமாக்க பிரதமர் தனது சீட் பெல்ட்டை கழற்றினார். இது தவறு என்பதை அவர் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்காக மன்னிப்பு கேட்டு உள்ளதாக அவர் கூறினார்.

மேலும் காரில் செல்லும் போது அனைவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என பிரதமர் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...