தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்: குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்த தகவல்

Date:

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது, ​​குறித்த அதிகாரிகளுக்கு அதே தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த தொலைபேசி இலக்கம் காலி மாவட்டத்தில் உள்ள முகவரிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், குறித்த முகவரியில் வசிப்பவர் தற்போது இலங்கையில் இல்லை எனவும், அவ்வாறான சம்பவம் தொடர்பில் அவருக்குத் தெரியாது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் ஆகியவற்றின் ஆதரவுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக அவர் கூறினார்.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களின் வீடுகளுக்கும் ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஆணையத்தின் இரண்டு உறுப்பினர்களான எஸ்.பி. திவரட்ன மற்றும் கே.பி.பி. பத்திரனவுக்கு ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம். மொஹமட்டுக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதேவேளை, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சூழலை தயார்படுத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதோடு, தமது உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தல் தொடர்பில் பெற்றோலிய சட்டமூலக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தலைவர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...