தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா வியாழனன்று பாராளுமன்றில்!

Date:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது பிரச்சாரத்திற்காக செலவிடக்கூடிய அதிகபட்ச  தொகையை தீர்மானிக்கும் உரிமையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவதற்கான ‘தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா’  எதிர்வரும்  வியாழன் அன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி, தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றுக்கு அரசியல் ரீதியாக ஆலோசனை வழங்கியதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட தொகையை தீர்மானிக்கும் ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர், சட்டத்தின் கீழ் தனது பிரசாரத்திற்காக வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி அல்லது வேறு எந்த உதவியையும் பெறுவது தடுக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தெரிவுக்குழுவினால் இச்சட்டம் முதலில் முன்மொழியப்பட்டது.

Popular

More like this
Related

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...