‘நான் தவறு செய்தேன் என்று தீர்ப்பில் கூறப்படவில்லை’:அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால போட்டி!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே முன்னிறுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு கேட்டார்.

தமது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெற்றமைக்காக தாம் மன்னிப்புக் கோருவதாகவும், தாக்குதல்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார்.

“நான் தவறு செய்தேன் என்று தீர்ப்பில் கூறப்படவில்லை, ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு ஜனாதிபதியும் பொறுப்பு. அதுதான் எனக்கும் வழக்குக்கும் உள்ள தொடர்பு” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...