நிதி கொடுப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு திறைசேரி அதிகாரிகள் விளக்கம்!

Date:

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இந்நேரத்தில் நடத்தினால், தேர்தல்கள் ஆணைக்குழு கோரும் பணத்தை ஒரேயடியாக வழங்காது பகுதிவாரியாக வழங்க முடியும் என பொது திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே திறைசேரி அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மற்றும் அதன் அங்கத்தவர் சபை மற்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கேட்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதுள்ள நிதிச் சிக்கல்கள் காரணமாகப் பணத்தைப் பகுதிகளாக வழங்க முடியும் என திறைசேரி சார்பில் கலந்துரையாடலுக்கு வந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...