பாகிஸ்தானின் கராச்சி உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் முன்னாள் பிரதமர் பூட்டோவின் கட்சி வெற்றி!

Date:

235 ஆசனங்களைக் கொண்ட பாகிஸ்தானின் மிகப்பெரிய உள்ளுராட்சி பிரதேசமான கராச்சிக்கான உள்ளூராட்சித் தேர்தலில் பாகிஸ்தானின் ஆளுங்கட்சியின் கூட்டமைப்பில் ஒரு கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 93 இடங்களைப்பெற்று வெற்றி பெற்றுள்ளது.

அதேவேளை இத்தேர்தலில் கலந்துகொண்ட இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி (PTI) 40 ஆசனங்களையும் இஸ்லாமிய பின்புலம் கொண்ட ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி  (JI) 86 இடங்களையும் பெற்றுள்ளன.

வேறு சிறு கட்சிகள் சிறிய அளவிலான ஆசனங்களை பெற்றுள்ளன. இந்த தேர்தல் முடிவுகளின் பின்னர் கராச்சி உள்ளூராட்சி மன்ற பிரதேசத்தை வெற்றியீட்டிய பாகிஸ்தான் மக்கள் கட்சி அமைக்குமா அல்லது இம்ரான்கானின் கட்சியும் ஜமாஅத்தோ கட்சியும் இணைந்து அமைக்குமா என்ற கருத்து பரவலாக பேசப்படுகின்றது.

Popular

More like this
Related

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் பேகம் காலிதா ஷியா காலமானார்!

பங்களாதேஷின் முதலாவது பெண் பிரதமர் எனும் பெயர்பெற்ற முன்னாள் பிரதமர் பேகம்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (30) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா,...

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...