கொள்ளுப்பிட்டி புனித அந்தோனி வீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அதேநேரம் போராட்டம் காரணமாக மரைன் டிரைவ் வீதி பொலிஸாரால் மூடப்பட்டுள்ளது.
இதேவேளை கொள்ளுப்பிட்டி சந்தியில் வைத்து பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வாசித்துக் காட்டியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடல் நோக்கி செல்கின்றனர்…